search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்கை நதி"

    ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய்களையே பேசிவரும் ராகுல் காந்தி கும்பமேளாவுக்கு வந்து கங்கை ஆற்றில் தனது பாவங்களை கழுவ வேண்டும் என உ.பி. மந்திரி குறிப்பிட்டுள்ளார். #UPminister #Rahul #washoffsin #lyingoverRafale
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த்நாத் சிங் இன்று வாரணாசி நகரில் பிரதமரின் ஆரோக்கிய காப்பீடு திட்டம் தொடர்பான அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்தார்த்நாத் சிங், ‘ரபேல் விவகாரத்தில் கடந்த இரண்டாண்டுகளாக ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருகிறார். தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

    பிரயாக்ராஜ் (முந்தைய அலகாபாத்) நகரில் விரைவில் நடைபெறவுள்ள கும்பமேளா விழாவுக்கு ராகுல் காந்தி வர வேண்டும். இங்குள்ள கங்கை ஆற்றில் நீராடி அவர் பேசிய பொய்கள் தொடர்பான பாவங்களை கழுவிக்கொள்ள வேண்டும் என அவரை நான் அழைக்கிறேன். கங்கைத்தாய் அவரது பாவங்களை மன்னிப்பாராக!’ என குறிப்பிட்டார். #UPminister #Rahul #washoffsin #lyingoverRafale
    அகர்வால் மரணத்தை தொடர்ந்து கங்கையை சுத்தப்படுத்த கோரி மேலும் ஒரு சாமியார் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். #GopalDas #Ganga #GDAgarwal
    ரிஷிகேஷ்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே அணைகள், தடுப்பணைகள், நீர் மின் நிலையங்கள் கட்டுவதால் நதியின் போக்குமாறுகிறது என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆன்மீகவாதியுமான ஜி.டி. அகர்வால் 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார்.

    அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு சாமியார் தலைநகர் ரிஷிகேஷில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் பெயர் கோபால்தாஸ்.

    36 வயதாகும் இவர் இளமையிலேயே துறவியானார். பிரபல சாமியார் அரவிந்த் ஹத்வாலின் சீடர் ஆவார்.

    கங்கையில் கால்வாய்கள், சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 24-ந்தேதி முதல் ரிஷிகேஷில் கங்கை நதிபாயும் பாக். மலைப்பகுதியில் உண்ணாவிரதம் தொடங்கினார்.

    நேற்று அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சாமியார் கோபால்தாசை ஆம்புலன்சில் ஏற்றி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் முழு சிகிச்சை அளித்து வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக வலுக்கட்டாயமாக உணவு சாப்பிட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். #GopalDas #Ganga #GDAgarwal
    முன்னாள் பிரதமர் 'பாரத ரத்னா’ அட்டல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தி இன்று ஹரித்துவார் நகரில் கங்கைல் ஆற்றில் கரைக்கப்பட்டது. #AtalBihariVajpayee
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.

    பன்னா லால் பல்லா நகராட்சி கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை பிரேம் ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் புனித நதியான கங்கையின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் பகுதிக்கு சென்று சேர்ந்தது.


    புரோகிதர்கள் மந்திரம் ஓத, ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளும், அவரது சிதைக்கு தீமூட்டியவருமான நமிதா கலசத்தில் இருந்த வாஜ்பாயின் அஸ்தியை கங்கை நீரில் கரைத்தனர்.

    இந்த சடங்கில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், வாஜ்பாயின் பேத்தி நிஹாரிக்கா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #RIPVajpayee #AtalBihariVajpayee #VajpayeeAsthiimmersed
    2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குள் கங்கை, யமுனை நதிகள் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு விடும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார். #NitinGadkari
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, கங்கை, யமுனை நதிகள் தூய்மை ஆக்கப்படும் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரி கூறியதாவது:

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் படி, இந்தியாவின் மிகவும் முக்கிய நதிகளான கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது.

    மேலும் 20 சதவீத பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கங்கை மற்றும் யமுனை நதிகளின் கிளை நதிகளையும் தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்குள் பணிகள் முழுவதும் முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #NitinGadkari #YamunaRiver #GangaRiver
    ×